பிரேசில், ரஷியாவில் உயர்ந்த கொரோனா…

இந்த உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கமானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளே கொரோனாவிற்க்கான தடுப்பூசி கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது. தினமும் மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், சமுக இடைவெளி மற்றும் சானிடைசரால் கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் அமெரிக்கா கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பு 5,905,415 ஆக உயர்ந்துள்ளது. பலியான நபர்களின் எண்ணிக்கை 362,024 ஆக உயர்ந்துள்ளது. 2,579,691 பேர் பூரண நலன் பென்றுள்ளனர்.

அமெரிக்காவில் 1,768,461 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,223 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 103,330 ஆக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 438,812 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 1,067 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 26,764 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவில் 379,051 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 174 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,142 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் 284,986 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேயொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 27,119 ஆக உயர்ந்துள்ளது.

ஐரோப்பாவில் 269,127 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 377 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 37,837 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 231,732 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 70 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 33,142 ஆக உயர்ந்துள்ளது. பிரான்சில் 186,238 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் 66 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 28,662 ஆக உயர்ந்துள்ளது.