கொளுத்திய வெயில்.. பற்றி எரியும் காட்டுத்தீ… எந்த நாடு தெரியுமா?

சைபீரிய நாடுகளில் உள்ள காடுகள் வெப்ப அலைகளின் கீழ் சிக்கி தவித்து வருகிறது. சைபீரிய பிராந்தியத்தில் பல பகுதியில் 40 டிகிரி வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், ஆர்டிக் துருவத்திற்கு வடக்கு பகுதியில் சைபீரிய கட்டங்கா பகுதி இருக்கிறது. இங்கு அதிகபட்சமாக 78 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இந்த வெப்பநிலை இயல்பான வெப்பத்தை விட 46 டிகிரி அதிகம் ஆகும். இதனைப்போன்று கட்டங்காவில் 32 டிகிரி அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. பொதுவாக மே மாதத்தில் இவ்வாறான வெப்பம் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படுத்தாது என்ற பட்சத்திலும், குளிர்காலத்தில் இப்படியான வானிலை நிலவி வருகிறது.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில் நிலவி வரும் சராசரி வெப்பநிலை 2020 ஆம் வருடத்தின் வெப்பநிலையை அதிகமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், சைபீரிய வெப்பநிலை அதிகரிப்பு சுற்றுசூழல் அமைப்புகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய சைபீரிய காடுகளில் எரியும் தீ, எதிர்பார்த்ததை விட அதிகளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆர்டிக் பகுதியல்பணி உருகும் பிரச்சனையும் அதிகளவு ஏற்படுகிறது.