உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 5,905,415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 362,024 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 2,579,691 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,768,461 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 103,330 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 498,725 பேர் குணமடைந்துள்ளனர்.