தமிழகத்தில் கரோனா வைரஸின் தாக்கமானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் கரோனா பாதிப்புகள் கடுமையான அளவு அதிகரித்து வருகிறது. இதனால் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு இருந்த பள்ளி மாணவர்களுக்கான 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மற்றும் விடுபட்ட 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போதுவரை கரோனா வைரஸின் தாக்கத்தால் தமிழகம் தினமும் அதிகளவு பாதிக்கப்பட்டு வரும் சூழலில், அடுத்தகட்டமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தேர்வுகள் அறிவித்தபடி நடைபெறுமா? தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என்று பல்வேறு கேள்விகள் அடுக்கடுக்காக எழத்துவங்கியது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிச்செட்டிபாளையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும், ஜூலை மாதம் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுல வெளியாகும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்