தமிழக முதல்வர் சிறு குறு நிறுவனத்திற்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவு இருந்தாலும், மரணங்களை கணக்கிடுகையில் பாதிப்பு குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் குறைந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரின் தலைமையில் பிரத்தியேக சிறப்பு பொருளாதார மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கத்தால் அதிகளவு பாதிக்கப்பட்டாலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாம் கட்டாயம் ஆயத்தமாக வேண்டும். இன்று விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவது மற்றும் சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனத்திற்கு கடன் வாழங்குவது, சுய உதவி குழுவிற்கு மானியத்துடன் கடன் வழங்குவது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.
விவசாயத்திற்கு கடனுதவி வழங்க முழு ஒத்துழைப்பை அனைவரும் தர வேண்டும். சிறு, குறு, தொழில் நிறுவனத்தின் மூலமாக 1 கோடி பேர் வேலைவாய்ய்ப்பை பெறுவார்கள். தமிழகத்தில் 5 இலட்சம் சிறு, குறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் சிறு, குறு தொழில் நிறுவனத்தின் பங்காக 30 விழுக்காடு இருக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 3 இலட்சம் கோடியில் சிறு, குறு நிறுவனங்களுக்கு அதிகளவில் கடன் வழங்க வழிவகை செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.