உடல் பகுதியில் சில இடங்கள் துடித்தால் சில பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.
அப்படி நம் உடலில் எந்த பகுதி துடித்தால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்
- உங்களின் கன்னங்கள் தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பின், நீங்கள் விரைவில் பொருளும், செல்வமும் அடைய வாய்ப்புள்ளது. அதோடு மிக நல்ல செய்திகள் உங்களைத் தேடி வரக் கூடும்.
- நீங்கள் பேசும் போது உங்களின் உதடுகள் துடிக்கும் பட்சத்தில் உங்கள் வாழ்க்கையில் உன்னதமாக புதிய நண்பரை விரைவில் கிடைக்கப் போவதாக அர்த்தம். அல்லது உங்களில் மிக விருப்பமான பழைய நண்பரை மீண்டும் சந்திக்கவும், அல்லது உங்களுடன் இணையக் கூடிய வாய்ப்பு உள்ளது.
- இடது கண் துடித்தால் உங்களை தேடி விரைவில் நீங்கள் பல நாட்களாக எதிர்பார்த்த ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.
- உங்களின் வலது கண் துடிக்கும் பட்சத்தில் உங்களின் நீண்டநாள் கனவு நிறைவேறும்.
- ஆண்களின் வலது உடல் பாகங்கள் துடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல யோகம் தேடி வரலாம்.
- பெண்களுக்கு எதிராக அதாவது இடது பக்கம் துடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வலது பக்கம் துடிக்கும் பட்சத்தில் கெட்ட செய்தி வரலாம்.
- சாமுந்திரிக்கா லட்சண சாஸ்திரப்படி மூளையிலிருந்து வரக்கூடிய சிக்னல் மூலம் ஒருவரின் எதிர்காரலத்தை கூறக்கூடிய உடல் துடிப்புகள் ஏற்படலாம்.
- மூளையின் துடிப்பு உடலின் தசைகளில் ஏற்படும் போது அது வலதுபக்கமாக இருந்தால் அவருக்கு மிக நல்ல பலனும், அதுவே இடது பாகமாக இருப்பின், தொடர்ந்து துடித்துக் கொண்டிருப்பின் அவருக்கு ஏதேனும் கெட்ட செய்தி வர வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அது அவரின் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு வேலை இழப்பு ஏற்படலாம் அல்லது மரணமாக கூட இருக்கலாம்.