தானாக நகரும் கற்கள்!… மரண பள்ளத்தாக்கின் விடைகிடைக்காத மர்மம்

நகரும் கற்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் நடக்கிறது.

மரணப் பள்ளத்தாக்கு (Death Valley) பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ‘ரேஸ்டிராக் பிளாயா’ (Racetrack Playa) எனப்படுகிறது.

இந்தப் பகுதியில்தான், கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்கின்றன.

இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது, புதிரான விஷயமாக இருந்தது.

13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்கின்றன, பல ஆய்வாளர்களும் பலவிதமான கருத்துகளை கூறினாலும் இதற்கு இன்றளவும் விடையில்லை.