ஜோதிகா நடிப்பில் நேற்று OTT தளத்தில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இத்தளத்தில் இத்திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே விநியோகஸ்தர்கள், தியேட்டர்கள் தரப்பில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT ல் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் மீது புது சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. இதில் படத்தில் ஜோதிகாவுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) போராடுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
எனவே படத்தில் மாதர் சங்கத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பலரும் இப்பட இயக்குனர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இடம் புகார் அளித்துள்ளார்கள்.
இதனால் அவர் மாதர் சங்கத்திடன் AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தியது கவனக்குறைவால் நிகழ்ந்த ஒன்றே. உள்நோக்கம் எதுவும் இல்லை. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். அந்த பெயரையும் அதன் சின்னத்தையும் நீக்க உறுதியளிக்கிறோம். கள ஆய்வில் அவர்களின் போராங்களிலிருந்து நிறைய தகவல்களை சேகரித்துள்ளோம். அந்த வகையில் நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோன் என கூறியுள்ளார்.