தேவையான பொருட்கள்:
இட்லி – 4-5
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை:
இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டவும்.
மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
இட்லி துண்டுகளை மிளகாய் தூள் கலவையில் தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி, இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.