சூரரை போற்று தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா? படத்தின் சூப்பரான செய்தி!

சுதா கே பிரசாத் இயக்கத்தில் சூரரை போற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பு எல்லோரின் மனதிலும் இருக்கிறது. கோடை விடுமுறை ஸ்பெஷலாக வெளியாக வேண்டிய இப்படத்தின் ரிலீஸ் கொரோனால் தடையானது.

இயல்பு நிலை திரும்பிய பின் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படமும் அமேசான் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சூர்யா சூரரை போற்று படம் என் மனதிற்கு மிக நெருக்கமானது. இதில் இரண்டு பாடல்கள் குறிப்பிடத்த நேரத்தில் வெளியாகும். அவை நன்றாக அமைந்துள்ளன. சூரரை போற்று படத்தை தியேட்டரில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.