தமிழகத்தில் இயங்கும் பேருந்துகளில் பயணிகள் பின்புற படிக்கட்டுகளை பேருந்தில் ஏறுவதற்கும், முன்புற படிக்கட்டுகளை இறங்க பயன்படுத்த வேண்டும். பேருந்தில் பயணம் செய்வதற்கு முன்னதாக சானிடைசரால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
முன்புற மற்றும் பின்புற படிக்கட்டுகளில் சானிடைசர் இருப்பதை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உறுதி செய்ய வேண்டும். பயணிகள் பேருந்துகளில் டிக்கெட் வாங்குவதை குறைக்க மாதாந்திர பாஸ் வழங்குதல் மற்றும் கியூ ஆர் கோடு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
பேருந்து தனது ஓவ்வொரு பயணத்தை நிறைவு செய்தவுடன் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். ஏ.சி.பேருந்துகளில் குளிர்பதன வசதியை உபயோகம் செய்ய கூடாது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
60 விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்க வேண்டும். அதிகளவு கூட்டம் இருந்தால் அடுத்த பேருந்துகளில் பயணம் செய்ய அறிவுரை கூற வேண்டும் என்றும், மேற்படி கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் கடைபிடிப்பதை டிக்கெட் பரிசோதனை அதிகாரிகள் கவனித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.