போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு?

போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு, தமிழக அரசு ஊதியக்குறைப்பு செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளதாவும், இதனால் பல இடங்களில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவதாகவும், தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தில் கைவைக்க கூடாது என்று டிடிவி தினகரன் ட்விட் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டரில், ” தமிழக அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்யப்போவதாக கூறப்படுவது கண்டனத்திற்குரியது. இதனைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

இதனால் பேருந்து போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே, ஊழியர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்கிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று கூறியுள்ளார்.