வறுமையில் வாடும் குடும்பத்திற்காக பணத்தை வாரி வழங்கிய 2.0 வில்லன் நடிகர்!

சூப்பர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் பட்சி ராஜன் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் அக்‌ஷய் குமார். ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகரான இவர் சமூக விழிப்புணர்வுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவையும் வெற்றியடைந்து நல்ல வசூல் கலெச்சனும் செய்து வருகின்றன.

தமிழில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஹிட்டான காஞ்சனா படத்தின் ரீமேக்கில் அக்‌ஷய்குமார் நடித்து வந்தார். கொரோனாவால் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அகஷ்ய் குமார் கொரோனா ஒழிப்புக்கான பிரதமர் நிவாரண நிதிக்காக அவர் ரூ 25 கோடி வழங்கினார்.

மேலும் அவர் மும்பை போலிசாருக்கு ரூ 2 கோடியும், மும்பை மாநகராட்சிக்கு ரூ 3 கோடியும் வழங்கியிருந்தார்.

தற்போது சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால் வேலை இழந்து வறுமையில் வாடி வரும் சினிமா கலைஞர்கள் 1500 பேரின் வங்கி கணக்கிற்கு தலா ரூ 3 ஆயிரம் என மொத்த ரூ 45 லட்சம் அனுப்பியுள்ளாராம்.

சமூக நல உதவிகளை தொடர்ந்து செய்து வரும் அவரின் இந்த நல்ல மனதை பலரும் பாராட்டியுள்ளதோடு பயனைடைந்தவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.