பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் 2018 வெளிவந்த படம் 2.0. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக பெரிய அளவில் ரசிகர்களுக்கு இடையே இருந்தது.
மேலும் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லை என்று பல வித விமர்சனங்கள் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றியுள்ள ஜீ நிறுவனத்திடம் இருந்து, இப்படம் உலகளவில் ரூ 800 கோடி வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.
மேலும் இப்படத்தின் பட்ஜெட் 540 கோடி என்று கூறும் பட்சத்தில், இப்படம் கண்டிப்பாக வசூல் ரீதியாக வெற்றி படம் என்று உறுதியாக கூறலாம்.
இதன்முலம் மீண்டும் ஒருமுறை நம்பர் 1 வசூல் மன்னன் என்று நிரூபித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.