உலக முழுவதும் கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே தனிமையில் இருந்து வருகிறார்கள். அன்றாட வாழ்வாதாரத்தை இந்திய மக்கள் இழந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் நாளுக்கு நாள் அமலில் வருகிறது. இதில் சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கும் சில அனுமதிகள் வழங்கியுள்ளது அரசு.
தற்போது லாக்டவுனில் நிகழ்ச்சிகள் ஏதுமில்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார் டிடி. பிரபல தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பணீயாற்றி வரும் டிடி தற்போது வேலையில்லாமல் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து நேரத்தை செலவிடுகிறார்.
சமீபத்தில் டிடிக்கு காலில் அடிபட்டு கட்டுபோட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைதொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் டிடி சமீபத்தில் படுத்திருக்குமாறு முகத்தை மட்டும் செல்ஃபி எடுத்து பகிர்ந்துள்ளார்.
இதற்கு நடன இயக்குநர் சதிஷ் கிழே விழுந்திட்டியா? சீக்கிரம் நலம்பெற வேண்டுகிறேன் என்று கூறி கருத்து தெரிவித்தார்.
ரசிகர்கள் கமெண்ட்களை செய்து வந்தனர். அதில் ஒரு நபர் உங்கள் காலில் அடிப்பட்டதற்கான காரணம் இவர்தானோ என்று சதிஷை டேக் செய்துள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்த டிடி உன்னை முதலில் ப்ளாக் செய்ய வேண்டும் என்று சிரித்தபடி மெசேஜ் செய்தார்.
View this post on Instagram
Smile always , it gives u a sense of strength ❤️ #somethingibeleivein #selfie #ladyinred