குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்து வீடியோ அழைப்பு அப்பிளிக்கேஷனாக Zoom விளங்குகின்றது.
எனினும் இந்த அப்பிளிக்கேஷன் தொடர்பில் பல எதிர்மறை கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இதற்கு பயனர்கள் தரவுகள் இலகுவாக திருடப்படக்கூடியதாக இருக்கின்றமையே பிரதான காரணமாகும்.
இந்த விமர்சனங்களை எல்லாம் தாண்டி சிறிய பாதுகாப்பு மாற்றங்களுடன் Zoom தொடர்ந்தும் வீறுநடைபோட்டு வருகின்றது.
இந்நிலையில் பாதுகாப்பினை மேலும் கூட்டும்பொருட்டு என்கிரிப்ட்ஷன் வசதியை மேலும் வலிமைப்படுத்தி வழங்க Zoom திட்டமிட்டுள்ளது.
ஆனாலும் இம் மேம்படுத்தப்பட்ட வசதியினை கட்டணம் செலுத்தி Zoom செயலியை பயன்படுத்துபவர்கள் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.