வியர்வை நாற்றம் தர்மசங்கடமாக இருக்கா? அப்போ இதை செய்யுங்கோ

பொதுவாக உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது.

வியர்த்த இடத்தை உடனே சுத்தப்படுத்தாமல் போகும்போது உருவாகும் வியர்வையில் பாக்டீரியா தொற்றால், வியர்வை ஒருவித கெட்ட வாசனையை வெளியிடுவதும்.

இது அருகில் இருப்பவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்.

இதனை தவிர்க்க நம்மில் பெரும்பாலானோர் கெமிக்கல் கலந்த டியோடரண்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இது ஒரு தற்காலிக தீர்வை மட்டுமே வழங்குகிறது.

இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து எளிய முறையில விடுபட வேண்டுமாயின் சில இயற்கை முறைகளை பின்பற்றினாலே போதும். எளிதில் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

அந்தவகையில் வியர்வை நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட அழிக்கும் ஓர் அற்புத ஜூஸ் ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
  • ஆப்பிள் – 1
  • பார்ஸ்லி – 1
  • நற்பதமான முட்டைக்கோஸ் இலைகள் – 3-4
  • இஞ்சி – 1/2 இன்ச்
  • எலுமிச்சை – 1
செய்முறை

முதலில் அனைத்து பொருட்களையும் நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின் அதை பிளெண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த ஜூஸை ஒரு டம்ளரில் ஊற்றினால், ஜூஸ் தயார்.