சினிமாவில் நடிக்க வந்து சில காலங்களிலே பல நடிகைகள் காணாமல் போய் விடுகிறார்கள். அந்தவகையில் ஐட்டம் பாடல் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும், சிவப்பதிகாரம், குரு என் ஆளு, தடையற தாக்க உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை மம்தா மோகன் தாஸ்.
இதைதொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். இதையடுத்து புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா மோகன் படங்களில் நடிப்பதை நிறுத்தி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று முழுவதுமாக குணமாகி சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது ஊமை விழிகள், உள்ளே வெளியே 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மம்தா சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். ஆள் அடையாளம்தெரியாமல் மாறிட்டாங்களே என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.