சினிமா பிரபலங்கள் குறித்து கிசுகிசுக்கள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. சில விசயங்கள் இதில் உண்மையாகவும் சில விசயங்கள் வதந்தியாகவும் இருக்கின்றன.
ஹாலிவுட் சினிமா அதிக எண்ணிக்கையில் திருமணம் செய்துகொள்ளும் மற்றும் விவாகரத்து செய்யும் பிரபலங்கள் இருக்கிறார்கள். காதல் தோல்விகள் அதிகம் கண்டவர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் கனடாவை சேர்ந்த சீரியல், சினிமா, மாடலிங் நடிகை பமீலா ஆண்டர்சன் 4 வது முறையாக திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக கூறியுள்ளார்.
52 வயதாகும் அவர் அண்மையில் ஒரு பேட்டியில் மீண்டும் திருமணம் செய்யம் விருப்பமா என ரசிகர்கள் கேட்கிறார்கள். கண்டிப்பாக ஆசை இருக்கிறது. கடவுளே இன்னும் ஒரு முறை மட்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும்.
கடந்த போன என்னுடைய வாழ்க்கை உறவுகள் தோல்வியடைந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். நான் மூன்று முறை தான் திருமணம் செய்துள்ளேன்.
டாமி லீ, பாப் ரிட்சி, ரிக் சாலமன் என மூவரை திருமணம் செய்துகொண்டேன். இதுவே அதிகம் தான். ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் நல்ல தருணங்கள் அப்படியே சென்று விட்டன. காதல் உணர்வு மிக்கவள் நான். என்னை குறித்து சுலபமாக அவதூறு பேசுகிறார்கள் என கூறியுள்ளார்.