சந்திரமுகி 2 படத்தின் கதாநாயகி யார்? பிரபல நடிகை வெளியிட்ட உண்மை தகவல்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் லாரன்ஸ் நடித்தவுள்ளார். இப்படத்தை பி. வாசுவே இயக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் மீண்டும் ஜோதிகாவை நடிக்க வைக்க போவதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தது.

ஆனால், சமீபத்தில் இந்த சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை சிம்ரன் அவர்களை நடிக்க வைக்க படக்குழுவினர் அவர்களிடம் அணுகியுள்ளதாக கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த செய்தியை குறித்து நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ள பதிவில் ” இப்படத்தில் நான் நடிக்கவில்லை, சந்திரமுகி கதாபாத்திரம் குறித்து படக்குழுவினர் என்னிடம் அணுகவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்த்த சிம்ரனின் அனைத்து ரசிகர்களுக்கும் இது மிக பெரிய ஷாக் தான்.