திருமண தேதியை அறிவித்த பாகுபலி நடிகர் ராணா..!!

தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல நடிகர் என்று பேர் எடுத்தவர் நடிகர் ராணா தகுபதி.

சமீபத்தில் ராணாவிற்கும், மிஹீகா பாஜாஜ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அந்த புகைப்படங்களை கூட தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார் நடிகர் ராணா.

இந்நிலையில் சமீபத்தில் ராணாவின் தந்தை சுரேஷ் பாபு அளித்த பேட்டி ஒன்றில் ” வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. மேலும் அரசு விதிமுறையை பின் பற்றி தான் இந்த திருமணம் நடக்கும்” என கூறியுள்ளார்.