பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியை சார்ந்தவர் கபிலன். இவனின் மீது பல அடிதடி வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதால், இவன் அப்பகுதியில் ரவுடி போல வளம் வந்துள்ளான்.
இந்நிலையில், இதே பகுதியை சார்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து தொந்தரவு செய்து வந்துள்ளான். பலமுறை காதலை கூறியும், பெண் காதலை ஏற்க மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த சமயத்தில், பெண்ணின் வீட்டிற்கு முன்னர் சென்ற கபிலன், பெண்ணின் பெற்றோர் மற்றும் பெண்ணிடம் அவதூறாக பேசி பிரச்சனை செய்துள்ளான். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கைகலப்பு ஏற்பட்டு, கபிலனை பெண் வீட்டார் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதன்பின்னர் கத்தியால் குத்தப்பட்ட கபிலன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழக்கவே, இந்த சம்பவம் நடைபெற்ற பின்னர் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து விசாரித்ததில் ஒருதலைக்காதல் தொல்லையால் சம்பவம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.