பருத்திவீரன் படம் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து சில படங்களில் நடித்த பின் முஸ்தபா என்பவரை திருமணம் செய்து ஹைதராபாத்தில் செட்டிலானார்.
அண்மைகாலமாக படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ள பிரியாமணி வெப் சீரிஸ் ஒன்றிலும் இணைந்தார்.
இந்நிலையில் ஹிந்தி சினிமாவில் மைதான் படத்தில் நடிகர் அஜய் தேவ்கண் உடன் இணைந்தார். கால்பந்து வீரர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்றை மையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வந்தது.
இதற்காக மும்பையில் 200 தொழிலாளர்களை கொண்டு 16 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஷெட்டை 2 மாதமாக உருவாக்கினார்களாம். நாள் ஒன்றுக்கு இந்த ஷெட்டிற்கு லட்சக்கணக்கில் வாடகை செலவு செய்து வந்தார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பயன்பாட்டில் இல்லாத இந்த ஷெட்டால் நிறைய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.
இந்த ஷெட்டில் கால்பந்து மைதானம், பயிற்சி கூடங்கள், குடியிருப்புகள் எல்லாம் அமைக்கப்பட்டதாம். மேலும் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் நவம்பர் மாதத்தில் புதிய ஷெட் தான் அமைக்க வேண்டுமாம்.
இதனால் படக்குழு ஷெட்டை இடித்து தரைமட்டமாக்கிவிட்டதாம்.
இப்படத்தை போனி கபூர் ஜீடிவி யுடன் இணைந்து தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.