நடிகை குஷ்பூ சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கிய காலம் அன்று. இன்று குடும்பம், அரசியல், சின்னத்திரை என இருந்து வருகிறார்.
ஜாக்பாட் என்னும் போட்டி நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வந்ததை நாம் மறக்க முடியாது. அண்மைகாலமாக லட்சுமி ஸ்டோர் சீரியல் நடித்து வந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு, படப்பிடிப்பு நிறுத்தம் என ஆனதால் சினிமா, சின்னத்திரை தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.
அண்மையில் நிபந்தனையுடன் படப்பிடிப்பு நடத்த சின்னத்திரைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில் டிவி படப்பிடிப்பில் 10 வயதுக்குள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணியாற்றக்கூடாது என அரசு அறிவிப்பு வெளியிட்டதா என நடிகை எஸ்.வி.சேகர் கேள்வி கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை குஷ்பூ சார் இதில் எந்த வயதிலும் நீங்கள் வர மாட்டீர்கள், கவலைப்படாமல் ஓய்வெடுங்கள் என கிண்டலடித்து பேசியுள்ளார்.