நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர். இவர் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
இதற்கு முன்பு நயன்தாரா நடிகர் பிரபுதேவாவை காதலித்தது அனைவரும் அறிந்ததே, வில்லு படத்தில் இவர்களுக்கு காதல் ஏற்பட்டு பின்பு ப்ரேக் அப் ஆனது.
இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தன் யூடியூப் சேனலில் நயன்தாரா மீண்டும் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு முன்பு சிம்புவுடன் ப்ரேக் அப் ஆகி பிறகு நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
அதோடு அந்த படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் இருந்தது, அதே போல் இப்படி ஒன்று நடந்தால் இதற்கும் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.