அண்மையில் வெளியான டீசரால் பெரும் சர்ச்சையில் சிக்கிய வலை தள தொடர் காட்மேன். ஜெய் பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் என பலர் இந்த வெப் சீரிஸில் நடித்திருந்தனர்.
பாபு யோகேஸ்வரன் இயக்கியிருந்த இந்த வெப் சீரிஸ் இந்து கடவுளை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகளும் இருந்ததாக சர்ச்சையில் சிக்கியது.
இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை காவல்துறையில் படக்குழு மீது இந்து முன்னணி அமைப்பு புகார் அளித்தது.
இதனால் காட்மேன் சீரிஸ் பட குழுவுக்கு போலிசார் வழக்கு பதிவு செய்து சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் படத்தை தயாரித்த ஜீ5 நிறுவனம் காட்மேன் சீரிஸ் குறித்து நிறைய கருத்துக்கள் வந்ததால் ரிலீஸை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். தனிப்பட்ட மதம், சமூகம் என யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளது.