மகளுடன் பிரிந்து சென்ற மனைவி.. விபரீத முடிவெடுத்த கணவன்.!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரெட்டியார் பாளையம் முத்துப்பிள்ளை தோட்டம் பகுதியை சார்ந்தவர் மூர்த்தி (வயது 45). இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 20 வருடத்திற்கு முன்னதாக இவருக்கு திருமணம் முடிந்துள்ள நிலையில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் சென்னையில் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப சண்டை காரணமாக மனைவி மற்றும் மகள்கள் மூர்த்தியை விட்டு பிரிந்து சென்ற நிலையில், இவர்கள் எங்கு சென்று இருந்தார்கள் என்பது தெரியாமல் இருந்துள்ளார்.

மனவருத்தத்துடன் இருந்து வந்த மூர்த்தி, தம்பி ஐயப்பனுடன் அங்குள்ள முத்துப்பிள்ளை 6 மாதமாக வசித்து வந்துள்ளார். மேலும், கடந்த சில நாட்களாக மனைவி மற்றும் மகளை நினைத்து மது அருந்திவிட்டு சோகமாக இருந்து வந்துள்ளார்.

கடுமையான உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், நேற்று இரவு மது அருந்திவிட்டு நள்ளிரவு நேரத்தில் சாப்பிட்டு வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.