ஸ்ரீலங்காவில் கொரோனா அதிகரிக்க இதுவே காரணம்..வெளியான தகவல்

ஸ்ரீலங்காவில் கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்குள் சமூகத்திலிருந்து கொரோனா வைரஸ் நோயாளர்கள் இனங்காணப்படவில்லையென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவ நிபுணர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை குறித்து இன்றைய தினம் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

தற்போது கொரோனா தொற்று ஸ்ரீலங்காவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்குள் சமூகத்திலிருந்து கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

குறித்த காலக்கட்டத்திற்குள் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளர்கள் அனைவரும் கடற்படை மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களே ஆவார்.

தொற்று தற்போது கட்டுப்பாட்டிற்குள் காணப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து திரும்புபவர்கள் கட்டம் கட்டமாக தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீலங்காவிற்கு திரும்புகிறவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் உதவியுடன் அழைத்துவரப்படுகிறவர்கள். இந்த செயற்பாடுகளை சிறப்பான முறையில் கட்டுப்பாட்டிற்குள் நடத்திவருகின்றோம்.

தினமும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இராணுவம் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனரென அவர் தெரிவித்துள்ளார்.