கோபம் என்பது மனித உணர்ச்சிகளில் ஒன்று. ஆனால் அதை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கோபத்தை கட்டுபடுத்துவதைவிட, சரியாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும். அப்படிக் கையாளத் தெரியாவிட்டால் நமது தொழில், உறவுகள், வாழ்க்கை என அனைத்தைம் சீரழிந்து பாழாகி விடும்.
உங்களுக்கு கோபம் வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
- தொடர்ந்து இயற்கை உணவுகளை, இயன்ற வரை சாப்பிட்டுப் பழக கோபம் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
- தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும்.
- கோபம் வரும்போது ஒன்று முதல் பத்து வரை எண்ணலாம்.
- கோபம் அதிகளவு வரும்போது தண்ணீர் குடித்தால் கோபம் தணியும்.
- கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும்.
- பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்துவந்தால் கோபத்தை குறைக்கலாம்.
- கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்துக் கொள்ளலாம்.
- கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்யலாம்.
- கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் சென்று விடலாம்.
- கோபத்திற்கு வயிறு ஈரத்துணிப் பட்டி, கண் பட்டி, நெற்றிப்பட்டி போடலாம்.
- நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்தால் கோபம் குறையும்.
- கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம்.
- கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்தும்.
ஒரு நொடி கோபப்பட்டால் 60 விநாடிகள் சந்தோஷத்தை இழப்போம் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். எனவே, பிறரின் மேல் நம்பிக்கை வைத்து கோபத்தை வெற்றி கொள்ள வேண்டும். பிறருடன் நட்பாய் இருங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்.