இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக திகழ்ந்து ஆட்டகளத்தினை மாற்றும் திறனை பெற்றுத்தருபவராக இருப்பவர் ஹார்திக் பாண்டியா. லாக்டவுனிற்கு முன் நடண்ட்க ஒரு ஆட்டத்தில் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் சில சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்துள்ளார்.
இந்தியாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடக்கவிருந்த ஆட்டத்தில் மீண்டும் ஆட ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் கொரானா லாக்டவுனால் தள்ளிபோனது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் செர்பியாவை சேர்ந்த நடாஷா என்ற நடிகையை காதலித்து வந்துள்ளதாகவும் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயர்தார்த்தம் நடைபெற்றது எனவும் செய்து வெளியானது.
இருவரும் இணைந்து வெளியில் செல்வதுமாக இருக்கும் புகைப்படத்தை சமுகவலைத்தளத்தில் வெளியிட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து தம் காதலி கர்ப்பமாக இருக்கிறார் என்று அவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நடாஷாவும் நானும் சிறந்த பயணத்தை மேற்கொண்டோம் எனவும், புது வாழ்வை வரவேற்க தயாராக இருக்கிறோம், எனவே அனைவரும் எங்களை வாழ்ந்துமாறு கேட்டுக்கொண்டு பதிவினை பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் திருமணமாகமல் எப்படி என்றும் அதுவும் லாக்டவுன் நேரத்திலா என்றும் ஆச்சரியமாக கேள்வி கேட்டு அதிர்ச்சியடைந்து வருகிறார். பல பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகிறார்கள்.