செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தி..!!

கொரோனா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்கவில்லை. ஆனால் அண்மையில் தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 பேர்களை வைத்துக்கொண்டு படப்பிடிப்புகள் துவங்கலாம் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் பிரபல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜி தமிழ் நிறுவனம் இந்த உத்தரவை மேற்கொண்டுள்ளது. ஆம் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு துவங்கிப்போவதாக ஜி தமிழ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தியாகவும், மிக பெரிய கொண்டாட்டமாகவும் அமையும். மேலும் இதனால் மிகவும் கீழே சரிந்த ஜி தமிழ் தொலைக்காட்சியின் TRP கண்டிப்பாக உயரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.