அமெரிக்க அதிகாரியின் செற்பாடு : ஸ்ரீலங்காவிடம் கேள்வியெழுப்பும் சீனா….

அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கையில் சட்டங்களை மதிக்காமைக்கு காரணம் என்னவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த கேள்வி வினவப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் PCR பரிசோதனை ஆரம்பிக்கப்பட்ட நாளில், இலங்கைக்கு வருகைதந்த முதலாவது பயணியான ஐரோப்பிய ஒன்றிய பெண் அதிகாரி எவ்வித முரண்பாடும் இன்றி PCR பரிசோதனையை எதிர்கொண்டார்.

தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் ஏற்கனவே வெளிவிவகார அமைச்சு இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு அறிவித்துள்ளதாக சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பாதை’ திட்டத்தின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, பரிசோதனை மூலம் வியன்னா பிரகடனத்திற்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அமெரிக்க தூதரக அதிகாரிகள் இலங்கையில் சட்டங்களை மதிக்காமைக்கு காரணம் என்னவென கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் அமெரிக்காவில் இவ்வாறு செயற்படுவதற்கான அனுமதி வழங்கப்படுமா எனவும் சீனாவின் ஒரே மண்டலம் ஒரே பாதை திட்டத்தின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் வினவப்பட்டுள்ளது.