ரஷ்யாவில் உருவெடுக்கும் மற்றுமொரு ஆபத்து

ரஷ்யாவில் கொரோனா அச்சுறுத்தல் நிறைவடையாத நிலையில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள்(ஜாம்பி பூச்சிகள்) பெருகி மக்களுக்கு பல நோய்களை விளைவிப்பதால் ரஷ்ய அரசு தற்போது திணறி வருகிறது.

கொரோனா பாதிப்பே முடியாத சூழலில், தற்போது ரஷ்யாவில் பரிணாம வளர்ச்சியில் இரத்தம் உறிஞ்சும் உண்ணிகள் உருவாகியுள்ளது.

இந்த உண்ணிகள் தற்போது ரஷ்யா, சைபீரியா நாடுகளில் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து வருகிறது.

இதுவரை சுமார் 8,215 பேர் இந்த இரத்தம் உறிஞ்சும் புதுவகை உண்ணிகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 2,125 பேர் குழந்தைகள் எனவும் ரஷ்ய மருத்துவர்கள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களை கடிக்கும் இந்த உண்ணிகளால் பல நோய்கள் உருவாகுவதாகவும், குறிப்பாக மனித மூளையில் ஒருவித வீக்கதை ஏற்படுத்தும் என்செபாலிடிஸ் – நோய் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் நரம்பு மண்டலம், இதயம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடுகின்றனர்.