தம்பி வயது பையனுடன் கல்யாணம்!.. 25 வயது பெண்ணை எச்சரித்த பொலிசார்

வேலூர் அரியூரை சேர்ந்த 25வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.

பெரிய செல்வந்தரான அந்த பெண்ணின் தந்தை தனது மகளுக்கு நல்ல அழகான மாப்பிள்ளையாக பார்த்து திருமணம் வைப்பதாக முதல் கணவன் வீட்டாரிடம் சவால் விட்டுள்ளார்.

அதன் படி தனது மகளை 2 வது தாரமாக திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஒரு கார், மோட்டார் சைக்கிள், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வழங்கப்படும் என தனது நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது நண்பர்களில் ஒருவர், தன்னுடைய 18 வயது மகனை திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ரகசியமாக நிச்சயம் நடந்ததுடன் 12ம் திகதி திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளையின் தாய் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க, வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் திருமணம் நடந்தால் அதற்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்து விட்டு வந்தனர், திருமணமும் நிறுத்தப்பட்டது.