உலக நாட்டுக்கே சீனா கொடுத்த மோசமான பரிசு..

உலக நாட்டு மக்களை தற்போது வரை ஆட்டிபடைத்துகொண்டிருப்பது என்றால் அது சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து பல உயிர்களை காவு வாங்கி வந்தது.

இதையடுத்து, படிப்படியாக உலக நாடுகள் அனைத்திற்கு பரவ தொடங்கியது. இதனை கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவை இன்று வரை பிறப்பித்தி அமல்படுத்தி வருகிறது. ஆனாலும் கொரோனா வைரஸ் குறைந்தபாடு இல்லை.

இந்த வைரஸால் பெரிதும் பாதிக்கப்பட்டது, அமெரிக்கா, இத்தாலி, ப்ரேசில், ரசியா, ஸ்பெயின், தற்போது இந்தியா என பாதிப்புகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, சீனா அமெரிக்காவைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டது, சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப நாங்கள் உதவினோம், அவர்களுக்கு ஆண்டுக்கு 500 பில்லியன் டாலர்களை வழங்கினோம். சீனாவுடனும் பல நாடுகளுடனும் நம் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் எவ்வளவு முட்டாள்தனமானவர்கள்.

நாங்கள் உலகத்துடன் இணைந்து செயல்படுகிறோம், நாங்கள் சீனாவுடனும் இணைந்து செயல்படுவோம். எல்லோரிடமும் பணியாற்றுவோம். ஆனால் நடந்தது ஒருபோதும் மீண்டும் நடந்து விடக்க்கூடாது. வைரஸ் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

உலக நாடுகளுக்கு சீனா வழங்கிய பரிசு. இது நல்ல பரிசல்ல. அவர்கள் அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். மிகவும் மோசமான பரிசு. இதனை தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆனால் மிக மோசமான பரிசை உலகிற்கு சீனா வழங்கி விட்டது.

உகானில் உருவான அந்த வைரஸ் மிக மோசமான பிரச்சினைகளை உருவாக்கியது. ஆனால் அது சீனாவின் மற்ற பகுதிகளுக்கு செல்லவில்லை. அது எப்படி நடந்தது. இதை தான் உலகம் கேட்கிறது.

கடந்த வாரம் என்ன நடந்தது என்பதை நாம் அனைவரும் பார்த்தோம், அதனை நடக்க விட்டு இருக்கக் கூடாது. இது நம் நாட்டுக்கு நடந்த ஒரு பெரிய விஷயம். சமத்துவத்தின் அடிப்படையில் இது அவருக்கு ஒரு சிறந்த நாள் என தெரிவித்தார்.