உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் தனது இணையத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு 2019 ஜூன் மாதம் முதல் தற்போது 2020 மே வரையில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த அதிக சம்பளம் பெரும் டாப் 100 பட்டியலில் கெய்லி ஜென்னர், கென்யா வெஸ்ட், ரோஜர் பெடரர், கிறிஸ்டினோ ரொனால்டோ, மெஸ்ஸி உள்ளிட்டோர் முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ளனர்.
மேலும் இந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் வின் டீசல் 40வது இடத்தையும், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 52வது இடத்தையும், ஜெனிபர் லோபஸ் 56வது இடத்தையும், வில்ஸ்மித் 69வது இடத்தையும், ஜாக்கிசான் 80வது இடத்தையும், லேடி காகா 87வது இடத்தையும், செரீனா வில்லியம்ஸ் 98வது இடத்தையும், ஏஞ்சலினா ஜோல்லி 99வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
ஆனால் இந்த அதிக சம்பளம் பெரும் டாப் 100 பட்டியலில் இடம் பிடித்த ஒரே நடிகர் நம் இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் அக்ஷய் குமார் மட்டும் தான்.