யானை மற்றும் பசுவைத் தொடர்ந்து சிறுத்தைக்கு ஏற்பட்ட கொடூரம்…

சமீப காலங்களில் விலங்குகளின் மரணம் பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. யானை மற்றும் பசுவிற்கு உணவில் வெடிவைத்து கொடுக்கப்பட்டதில் பரிதாபமாக மரணமடைந்தது பலரையும் கொந்தளிக்க வைத்தது.

இந்நிலையில் சிறுத்தையை மிக கொடூரமாக கொலை செய்து, அதன் நகங்கள், பற்கள், தோல்கள் என அனைத்தையும் வெறித்தனத்துடன் பிடுங்கி உள்ளனர் ஊர்மக்கள்.

மேலும் இறந்த சிறுத்தையை தோளில் போட்டுக் கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியும் உள்ளனர்.

இந்த கோர சம்பவம் இந்தியாவில் குவஹாத்தியில் அரங்கேறியுள்ளது. காதப்ரி என்னும் ஊருக்குள் காட்டுவிலங்குகள் அடிக்கடி வருவதால் அதனை பிடிப்பதற்கு வலையை விரித்து பிடிப்பதற்கு சோய்லாம் போடோ என்பவர் திட்டமிட்டுள்ளார்.

அவ்வாறு வலைக்குள் மாட்டிய சிறுத்தை, திடீரென வெளியே வந்த வேகத்தில் 7 வயது சிறுவனைக் கடித்து பிறாண்டியதால் கோபமடைந்த மக்கள் சிறுத்தையைக் கொலை செய்துள்ளதுடன் இவ்வாறான காரியத்தினையும் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 6 பேரை பொலிஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.