பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம், சத்ரியன், பாயும் புலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
தற்போது அலேகா, கன்னித்தீவு, மிளிர், பொல்லாத உலகில் பயங்கரம் கேம் ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன. இந்நிலையில் அவர் நடித்துள்ள மிளிர் படத்தின் போஸ்டர் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது.
இதில் அவரின் முகம், தலை, கைகளில் அடிபட்டுள்ளது போல உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு கம்பை கடித்தது போல ஆக்ரோஷமாக இருக்கிறார்.
இந்த போஸ்டரில் இருப்பது அவர் தானா என ரசிகர்களுக்கே சந்தேகம் எழுந்துள்ளது. இப்படத்தை நாகேந்திரன் இயக்க, கதா நாயகனாக ஷரன் நடித்திருக்கிறார். ஊரடங்கிற்கு பின் படம் வெளியிடப்படவுள்ளதாம்.