இசைஞானி இளையராஜவின் மகன் தொடர்பில் வெளியான தகவல்..!!

தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மட்டுமின்றி பலரையும் இசையால் கட்டிப்போட்டு இருக்கும் இசைஞானி இளையராஜவின் மகன் தான் யுவன் சங்கர் ராஜா.

தனக்கென ஒரு பாணியில் கிட்டத்தட்ட தன் தந்தையை ஒத்தது போல இசையமைக்கும் யுவனுக்கும் ஏன் இன்னும் தேசிய விருது கிடைக்கவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்றாகும்.

இதையடுத்து, யுவன் சங்கர் ராஜா கடந்த 2003 ஆம் ஆண்டு சுஜயா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு ஷில்பா என்பவரை திருமணம் செய்து கொண்ட யுவன் அவரையும் விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் கடந்த 2015 ஆம் அதன் ஜப்ருன் நிஷா என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டார்.

மேலும், இஸ்லாம் மதத்துக்கு மாறிய யுவன் தனது பெயரை அப்துல் காலிக் என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

சமீபத்தில், யுவன் மனைவி பேசியது, யுவன் 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்லாமை பின்பற்ற ஆரம்பித்திருந்தார். அதன் பிறகே அவருக்கும் எனக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அவரது மிகப்பெரிய கேள்விகளுக்கான பதில்கள் குரானில் கிடைத்திருக்கலாம். அதனால் அவருக்கு இஸ்லாம் மதத்தை பிடித்திருக்கலாம்.

மதத்தை தாண்டி எங்களுடைய எண்ண அலைவரிசை ஒரே மாதிரி இருந்தது. ஆரோக்கியமான உரையாடல் மூலமாக ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம் என்று பதிலளித்திருந்தார்.