சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்றாலே பொதுவாகவே எல்லோருக்கும் பயம்தான் இந்த நேரத்தில் தீயவைகளுக்கு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே போல ராகு காலம் எம கண்ட நேரங்களும் ஒதுக்கி வைக்கப்படுகின்றன.
இந்த நேரங்களில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருக்கும் என்று கேள்வி வரலாம். அந்த குழந்தைகள் அதிக வலிமையோடும் ஆற்றலோடும் இருப்பார்களாம். வரும் ஆனி மாதம் 7ஆம் தேதி ஜூன் 21ம் தேதி ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் நிகழப்போகிறது.
மிதுனம் ராசியில் நான்கு கிரக சேர்க்கையும் நிகழும் இந்த நேரத்தில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று பார்க்கலாம்.
கிரகணங்கள் ஏற்படுவது வானியல் நிகழ்வுதான் என்றாலும் ஜோதிடத்திலும் புராண கதைகளிலும் ராகு கேது எனப்படும் பாம்பு கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் நிகழ்வு என்று சொல்லப்படுகிறது. இது நல்ல காலம் இல்லை. இந்த நேரத்தில் பிறக்கம் குழந்தைகக்கு கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கிரகண காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு ஜாதகத்தில் ராகு, கேது, சனி போன்ற பாவ கிரகங்கள் வலிமை பெற்றிருக்கும். இது அந்த குழந்தையை தலைவனாகவும் மாற்றும் தேவையற்ற சகவாசங்கள் ஏற்பட்டால் பயங்கர வில்லனாக அந்த குழந்தை மாறும்.
வானில் அரங்கேறிய அதிசயம்.. இந்தியா உட்பட பல நாடுகளிலும் செம ஒளியோடு மிளிர்ந்த சந்திர கிரகணம்
கிரகண தோஷம்
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ ஏற்படும் போது பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படும். சூரியன் சந்திரன் ராகு ஒரே வீட்டில் இருக்கும் போது கேது நேர் எதிர் வீட்டில் இருப்பது முழு சூரிய கிரகணம். அதே போல சூரியன் கேது ஒரு வீட்டிலும் நேர் எதிர் வீட்டில் ராகு சந்திரன் இருப்பது சந்திர கிரகண தோஷத்தை ஏற்படுத்தும்
அப்பாவிற்கு பாதிப்பு
கிரகண தோஷம் அந்த குழந்தையை விட குழந்தையின் பெற்றோரைத்தான் பாதிக்கும். சூரிய கிரகணத்தில் குழந்தை பிறந்தால் எதிர்காலத்தில் தந்தையின் வளர்ச்சி மற்றும் பொருளாதார நிலைகளை அது பாதிக்க இடம் உண்டு. தந்தைவழி பூர்வீக சொத்துக்களை பெறுவதில் கூட சிக்கல் வரலாம். அப்பாவிற்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ராவணன் ஜாதகம்
கிரகண தோஷத்தை யோகமாக மாற்றலாம். கிரகணம் என்பது அனுசக்தி போன்றது நல்லதற்கும் பயன்படுத்தலாம். தீய விசயங்களுக்கும் பயன்படுத்தலாம். ராவணன், ஜராசந்தன் போன்ற மிகப்பெரிய அரக்கர்கள் எல்லாம் கிரகண தோஷத்தில் பிறந்துள்ளதாக புராண கதைகள் சொல்கின்றன.
பரிகாரம் என்ன
கிரகண காலத்தில் பிறந்தவர்கள் சிலருக்கு எந்த காரியத்திலும் தடையும் தாமதங்களும் ஏற்படும். ஏதோ ஒரு பதற்றத்திலேயே இருப்பார்கள். சிலருக்கு நோய் பாதிப்புகளும் ஏற்படும். இதற்கு ராகு கேது பரிகார சாந்தி செய்வதன் மூலம் காரியத் தடை ஏற்படுவதை தடுக்கலாம்.
கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக ஆற்றலை பெற்றிருக்கும், அந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவது பெற்றோர்களின் கைகளில்தான் உள்ளது.
அதிக சக்தி கொண்ட நேரங்கள்
அதே போல தீய நேரங்களாக கருதப்படும் ராகு காலம் எம கண்டத்தில் பிறந்தவர்கள் சாதனையாளர்களாகவும், ஒரே சிந்தனையோடும் எடுத்த காரியங்களில் வெற்றி பெறுபவர்களாகவும் இருப்பார்கள். ஒரு பிரச்சினைக்கு பல தீர்வுகளை சொல்லும் திறமைகள் எல்லாம் ராகு காலத்தில் பிறந்தவர்களாக இருப்பார்களாம்.
கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக இருக்கும் பேட்ஸ்மேன், பவுலர்கள் எல்லாம் ராகு காலம் எம கண்டத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள்.
ராஜயோக ஜாதகம்
ஒருவரின் ஜாதகத்தில் ராகு பகவான் 3 மற்றும் 6ஆம் இடங்களில் இருக்கப் பிறந்தவர்கள். கேது பகவான் 3 மற்றும் 6ஆம் இடங்களில் இருக்கப் பிறந்தவர்கள் மிகப்பெரிய ராஜயோகத்தை அனுபவிப்பார்கள்.
ராகு திசை கேது திசை காலங்களில் இவர்களுக்கு மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கும். அதே போல ஜாதகத்தில் ராகுவை குரு பார்த்தாலோ, ராகு உடன் குரு பார்த்தாலோ மிகப்பெரிய ராஜ யோகம் இருக்கும்.
பெற்றோர்கள் கவனம்
உலகில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே நட்சத்திர ராசிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு வாழ்க்கை முறை ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று பலரும் கேட்கலாம். என்னதால் ஜாதகத்தில் கிரகங்கள் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் அவரவர்களின் பூர்வ ஜென்ம கர்ம வினைப்படி வாழ்க்கைத்தரம் அமையும்.
ராகு காலம், எம கண்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக சக்தியும் ஆற்றலும் இருக்கும். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்த மாணவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நண்பர்களால் பாதிப்பு வரும். போதை வஸ்துக்களுக்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம் என்பதால் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும்.