எந்திரன் சிட்டியையும் மிஞ்சிய சிறுவன்! திரைப்படங்களையும் மிஞ்சிய காட்சி…

சிறு வயதில் படிப்பின் மீது ஆர்வம் இருக்கும் சிறுவர்கள் ஒருபுறம் என்றால், “இதையெல்லாம் படிக்க வேறு ஏதேனும் ஷார்ட் கட் இருக்கா?” என்று யோசிக்கும் சிறுவர்களும் உண்டு.

அப்படித்தான் எந்திரன் திரைப்பட கதாபாத்திரமான சிட்டிக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சிறுவன் ஒருவன் பாடங்களை படிக்கும் விதம் இணையத்தில் வீடியோவாக வைரலாகியுள்ளது.

ஆசிய முகம் கொண்ட பள்ளிச்சிறுவன் ஒருவன் வகுப்பறையில் அமர்ந்துகொண்டு புத்தகத்தில் இருக்கும் பாடங்களை நேரடியாக கையில் அள்ளி மூளையில் ஏற்றிக்கொள்ளுமாறு செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.