ஆறு மாத கர்ப்பிணி, கத்தி முனையில் பலாத்காரம்.. அரங்கேறிய சோகம்.!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் அருகேயுள்ள பைபிளாஜ் பகுதியில் 22 வயது பெண்மணி தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த 22 வயது பெண்மணி தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் கடைப்பகுதிக்கு சென்றுள்ளார். இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த அதே பகுதியை சார்ந்த பாரத் பர்மா என்பவர், பெண்ணிடம் கணவர் குறித்து கேட்டறிந்துள்ளார்.

அக்கம்பக்கத்து இல்லத்தில் இருக்கும் நபர் என்பதால் பெண்மணி சந்தேகம் கொள்ளாது, கணவர் கடைக்கு சென்றுள்ளார் என்று தெரிவிக்கவே, காமுகன் பெண்ணின் கணவரை வரும் வரை இருந்துவிட்டு பார்த்து செல்கிறன் என்று கூறியுள்ளான்.

சிறிது நேரம் கழித்து வந்து கணவரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று பெண் கூறவே, காமுடன் கர்ப்பிணி என்றும் பாராது பெண்ணை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அங்கிருந்து தப்பி செல்லவே, வெளியே சென்ற கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

கணவரிடம் நடந்ததை கூறி பெண் கதறிய நிலையில், காமுகனின் பிடியில் இருந்து தப்பிக்க பெண் எடுத்த முயற்சியும் பலனில்லாது, காமுகனின் கொடூரத்தால் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார்.

பின்னர் இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் காமுகனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.