கூகுளின் குரோம் உலாவியானது மிகவும் உலகப்பிரபல்யம் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இவ் உலாவியில் Incognito எனும் வசதியும் தரப்பட்டுள்ளது.
இதன் மூலம் குரோம் பயனர்கள் பாதுகாப்பாக இணைய உலாவலில் ஈடுபட முடியும்.
ஆனாலும் இவ்வாறான நிலையில் இணைய உலாவலில் ஈடுபட்ட பயனர்களை கூகுள் நிறுவனம் ட்ராக் செய்துள்ளது.
இச் சம்பவம் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக கூகுள் நிறுவனத்திற்கு தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 5 பில்லியன் டொலர்களை கூகுள் நிறுவனம் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது.
கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றமே இந்த அபராதத்தினை விதிததுள்ளது.