கூகுள் குரோமில் உள்ள Pin Tab வசதி பற்றி தெரியுமா?

இணைய உலாவிகளில் முதல்வனாக திகழ்வது கூகுள் குரோம் ஆகும்.

இதில் பயனர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று Pin Tab எனும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

குரோம் உலாவியில் ஒரே நேரத்தில் பல டேப்களை தோற்றுவிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.

அவ்வாறான டேப்களில் மிகவும் அவசியமானவற்றினை Pin செய்து வைத்துக்கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்த டேப்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு ஏனைய டேப்களை விடவும் முன்னுக்கு காண்பிக்கப்படும்.

அத்துடன் Pin செய்யப்பட்ட டேப்களில் உள்ள இணையப் பக்கங்களை இழக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படாது.

இவ் வசதியைப் பெறுவதற்கு தேவையான டேப் ஒன்றின் மீது Right Click செய்யவும்.

தோன்றும் மெனுவில் Pin என்பதை கிளிக் செய்யவும்.

Unpin செய்ய வேண்டுமாயின் மீண்டும் குறித்த டேப்பின் மீது Right Click செய்து தோன்றும் மெனுவில் Unpin என்பதை கிளிக் செய்யவும்.