நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திரும்ப சிறிது நேரத்தில் பசிக்குதா? அதுக்கு என்ன காரணம்

உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்கிறதா? என்ன சாப்பிட்டும் பசி அடங்கவில்லையா?

சில சமயங்களில் நாம் அப்போது தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் மறுபடியும் வயிறு பசிக்கும். இதற்கு காரணம் என்ன என்று நாம் யோசிக்காமல் பசி வந்ததும் எதையாவது சாப்பிட்டு விடுவோம்.

இதனால் தான் அதிகமான உடல் எடை, நீரிழிவு நோய் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சரி அடிக்கடி பசிக்கும் காரணம் குறித்து காண்போம்.

நொறுக்கு தீனி உணவுகள்

செயற்கை பானங்கள், கேண்டி, பாஸ்ட்ரி போன்ற நொறுக்கு தீணிகளில் எந்த கலோரியும் நமக்கு கிடைப்பதில்லை. இதை நீங்கள் எடுத்து கொண்டாலும் திரும்பவும் உடனே பசிக்க ஆரம்பித்து விடும். எனவே இதற்கு பதிலாக தானியங்கள், பழங்கள், காய்கறிகள், சால்மன், நட்ஸ், அவகேடா, முட்டை போன்ற சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

மன அழுத்தம்

நம் பசியை அடங்க வைக்க அட்ரீனலைன் என்ற ஹார்மோன் உதவுகிறது. ஆனால் அதே சமயத்தில் நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இந்த கார்டிசோல் ஹார்மோன் தான் நமது பசிக்கும் காரணமாக அமைகிறது. எனவே நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உங்கள் பசியும் அதிகரிக்கும்.

இரத்த சர்க்கரை

நீங்கள் பாஸ்ட்ரி, செயற்கை பானங்கள், சோடா போன்றவற்றை எடுத்தால் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள சர்க்கரையால் உங்கள் உடம்பிலும் சர்க்கரை சத்து அதிகமாகும். இதனால் இன்சுலின் சுரப்பு அதிகமாக தேவைப்படும். உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அதிகமாக பசிக்கும்.

கர்ப்பிணிகள்

கருவுற்ற பெண்களுக்கு முதல் சில வாரங்கள் அதிக பசி எடுக்க ஆரம்பித்து விடும். நிறைய வித விதமான உணவுகளை சாப்பிடுவதில் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே உடனே இந்த மாதிரியான பசி நீடித்தால் நீங்கள் கருவுற்று இருக்கிறீர்களா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள். இல்லையென்றால் மருத்துவரை அணுகி இது குறித்து ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.

வேகமாக சாப்பிடுதல்

நீங்கள் வேகமாக சாப்பிட்டாலும் உங்கள் வயிறு நிறையாது. காரணம் உங்கள் வயிறு நிறைந்து விட்டது என்பதை உணர சில கால அவகாசம் தேவை. எனவே நீங்கள் வேகமாக சாப்பிடும் போது அந்த உணர்வு ஏற்படாது. எனவே உணவை மெதுவாக மென்று விழுங்கி சாப்பிடுங்கள். நமது உணவை 20 நிமிடங்களாவது ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும் என்கின்றனர். இப்படி சாப்பிட்டால் தான் உங்கள் வயிறும் நிறையும் பசியும் எடுக்காது.

மருந்துகள்

சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட பசியை தூண்டி விடும். மன அழுத்தம், மனநிலை கோளாறுகளுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகளான ஆன்டிஹிஸ்டமைன், ஆன்டிசைகோடிக்ஸ், மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் போன்றவைகள் பசியை தூண்டும். எனவே இது குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து கொள்ளுங்கள்.

போதுமான தூக்கமின்மை

இரவில் தாமதமாக தூங்குவது உங்கள் பசிக்கு காரணமான ஹார்மோன்களான லெப்டின் மற்றும் கோர்லின் சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி பசியை தூண்டும். இதனால் நீங்கள் அதிகமான நொறுக்கு தீணிகளை நாடிச் செல்வீர்கள். இதனாலும் உங்கள் உடம்பில் அதிகப்படியான கொழுப்புகள் சேர்ந்து பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்.