எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய ரொம்ப சிரமப்படுவார்களாம்!

பொதுவாக சிலர் தங்கள் வாழ்க்கையில் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையில் வெற்றி என்பது அவர்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும்.

அதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாகவும் இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்தவகையில் 12 ராசியில் எந்தெந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைய சிரமப்படுவார்கள் என்று பார்க்கலாம்.

கடகம்

கடக ராசிக்கார்களின் வெற்றிக்கான வாய்ப்புகள் என்பது அவர்களின் தொழில் அபிலாஷைகளைப் பொறுத்தது.

அவர்களின் பயனுள்ள, உணர்ச்சிபூர்வமான, மோதலைத் தவிர்க்கும் தன்மை தொழில்முறை உலகிற்குள் இவர்கள் செல்வதை கடினமாக்கும்.

இவர்களின் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது மக்களை சார்ந்ததாக இருக்கும், பொருளை சார்ந்ததாக இருக்காது. எனவே இவர்கள் வெற்றிக்காக முயற்சி செய்வதும் குறைவுதான் அப்படி செய்தாலும் வெற்றிபெறும் வாய்ப்பும் மிகக்குறைவுதான்.

மகரம்

சாதனை செய்யத் துடிக்கும் மகர ராசிக்காரர்கள் வெற்றியில் கோட்டை விடுவதற்கு காரணம் அவர்கள் ஒருபோதும் தங்கள் வெற்றி குறித்து எப்போதும் திருப்தி அடையாமல் இருப்பதுதான்.

அவர்கள் தங்களை தாங்களே கடினமாக்கி கொள்வார்கள், காலவரையரையின்றி உழைப்பார்கள். அவர்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியும் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு அவர்களை வெறிகொள்ள செய்கிறது.

இவர்கள்வெளித்தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், இது மிகவும் ஆபத்தானது. இதனாலேயே இவர்கள் மகிழ்ச்சி இல்லாமல் வாழ்வார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்கார்கள் பொதுவாக சிறந்த பணியாளர்கள் அல்ல, ஏனென்றால் விஷயங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி அவர்களுடைய சொந்த யோசனைகள் உள்ளன. அவை சரியானதாகவே இருந்தாலும் மேலதிகாரிகள் அதனை கேட்கமாட்டார்கள்.

சுயாதீனமாக செயல்படும் இவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் முயல மாட்டார்கள்.

அவர்கள் தங்கள் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் அதிக சுயாட்சியைக் கொண்டிருக்க முடியும். வாழ்க்கையில் வெற்றியே இல்லையென்றாலும் இவர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருப்பார்கள்.

தனுசு

இவர்களுடன் பணியாற்ற அனைவரும் விரும்புவார்கள், ஆனால் இவர்கள் பெரும்பாலும் முதலாளிகளுக்கு பிடிக்காதவர்களாக இருப்பார்கள்.

இவர்களின் விளையாட்டுத்தனமான வேலை பெரும்பாலும் முதலாளிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.

வேறொருவரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இவர்கள் ஒருபோதும் வேலையை செய்யவும், வெற்றி பெறவும் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் இவர்கள் எப்பொழுதும் பிறரின் கட்டுப்பாட்டில்தான் இருப்பார்கள்.

மிதுனம்

உழைக்கும் உலகத்துடனான மிதுன ராசிக்காரர்களின் மிகப்பெரிய போராட்டம் அவர்களின் கவனம் செலுத்த இயலாமை குணமாகும்.

கார்ப்பரேட் ஏணியில் ஏற, நீங்கள் எந்த ஏணியில் ஏற விரும்புகிறீர்கள் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும்.

இவர்களுக்கு இது மிகவும் கடினமாகும். செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், அவர்களின் இயல்பைத் தழுவி, அவர்கள் தொடர்ந்து புதிய ஆர்வங்களைத் தொடரக்கூடிய ஒரு உற்சாகமான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதை உணர்ந்து, அதிக வெற்றியைப் பெறும் மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்காமல் செயல்படுவார்கள். வெற்றி இல்லாமல் இருப்பது இவர்களை ஒருபோதும் பாதிக்காது.

சிம்மம்

வெளியுலகத்திற்கு வெற்றிகரமாக காட்சியளிக்க வேண்டும் என்ற இவர்களின் பேராசைதான் இவர்களின் வெற்றியைத் தடுக்கிறது.

தங்களின் தகுதிக்கு மீறிய வேலையை செய்து அதில் வெற்றி பெற முடியாமல் தவிப்பார்கள்.

இவர்கள் அடிக்கடி தவறான பாதைகள் அல்லது அபாயமான வேலைகளில் சென்று மாட்டிக்கொள்வார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை தரலாம் ஆனால் ஒருபோதும் வெற்றியை தராது.