உயிர் கொல்லி வைரஸ் குறித்து இளம் நடிகர் நடித்து வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.!!

பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த விழிப்புணர்வு வீடியோவில் “முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், பணிக்கு செல்வோர்கள் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது ,எப்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு தங்களது கைகளை கழுவவேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும் “கழிவறைகளில் கிருமிநாசினிகள் கொண்டு கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். யாருக்கும் கை கொடுக்காமல் வணக்கம் வைத்து இனி பழக வேண்டும். அரசாங்கம் கூறிய விதிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டுமே போதும், இந்த கொரோனாவில் இருந்து விடுபடலாம் என கூறியுள்ளார் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண்.