Markham நகரில் கடந்த சனிக்கிழமை சந்தேகத்திற்கிடமான மரணமடைந்தவர் என முதலில் அறிவிக்கப்பட்ட தமிழர் கொலை செய்யப்பட்டுள்ளார் என இன்று (புதன்) காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் 45 வயதான மதன் மகாலிங்கம் என York பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தினர் .
இவர் இலங்கையில் யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாக கொண்டவர் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இவரது இறுதிக் கிரிகைகள் இன்று நடைபெற்றன.
இவரது மரணத்தை சந்தேகத்திற்கிடமானது என முதலில் அறிவித்த York பிராந்திய காவல்துறையினர் இந்த மரணம் குறித்த விசாரணையில் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
Steeles வீதி கிழக்கு Markham வீதி சந்திப்புக்கு அருகாமையில் Marydale வீதியில் உள்ள இல்லம் ஒன்றிற்கு வெளியில் சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.