இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 276,146 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,750 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 134,670 பேர் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதில் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் கடந்த 8 நாட்களில் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மகாராஷ்டிராவில் புதிதாக 3 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 94,041 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 149 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மகாராஷ்டிராவில் 3,448 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 1879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 44,517 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.