பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. ஆந்திராவை சேர்ந்த ரேஷ்மா முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக தொடங்கினர். அவர் ‘வம்சம்’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.
அதையடுத்து நடிகை ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தின்புஷ்பா என்கிற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானார். அந்த படத்தில் காமெடி நடிகர் சூரி, இவர் கழுத்தில் தாலியை கட்டுவார். அந்த ‘புஷ்பா புருஷன்’ காமெடி மிகப்பெரிய ஹிட்டானது. பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்துக்கொன்று மேலும் பிரபலமானார்.